ஜல்லிகட்டு முன்பதிவு செய்த விவரம்: முக்கிய தகவல்
Seithipunal Tamil January 08, 2025 10:48 AM

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் டோக்கன்கள் முன்பதிவு நிறைவு பெற்றது. நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய முன்பதிவு இன்று மாலை 5 மணி வரை நடைபெற்றது. 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 8,000க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள், 10,000-க்கும் மேற்பட்ட முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு  போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு  நேற்று தொடங்கியது. இன்று மாலை 5 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

 madurai.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். பதிவு செய்ததும் அவர்களுக்கான அனுமதிச்சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம்  செய்துகொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.   

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.