யாரும் பாம்பு நாக்கு அறுவை சிகிச்சை செய்யாதீங்க...ஜாமீனில் வெளிவந்த டாட்டூ கடை இளைஞர் கதறல்!
Dinamaalai January 09, 2025 01:48 AM

திருச்சி மாநகரம் வெனிஸ் தெருவில் வசித்து வருபவர் 25 வயது ஹரிஹரன்.  இவர் சத்திரம் பேருந்து நிலையம்  அருகே ஏலியன் டாட்டூ என்ற பெயரில் டாட்டூ கடை நடத்தி வருகிறார்.  இவர் தன்னுடைய நாக்கை நுனியை பிளவுபடுத்தி அதில் டாட்டூ வரைந்து உள்ளார். இத்தகவலை சமூக வலைதளங்களில் பதிவிட்டதில்  அவருடைய நண்பரும்  நாக்கின் நுனியை வெட்டி டாட்டூ வரைந்துள்ளார். அதனை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  

எந்தவித அனுமதியும் பெறாமல் இது போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலை செய்ததால்  ஹரிஹரன் கைது செய்யப்பட்டார்  திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஹரனுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.  சிறையிலிருந்து வெளியே வந்த பின்பு  ஹரிஹரன், “பாடி மாடிஃபிகேஷன் என்ற நாக்கு பிளவு முறையினை அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டேன். இது குறித்து முறையாக நான் கற்கவில்லை. புகார் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டு அங்கு  எனக்கு மனநல சிகிச்சை வழங்கப்பட்டது. பாடி மாடிஃபிகேஷன் செய்வது  தவறு எனவும் அறிவுறுத்தப்பட்டது.  நான் புரிந்து கொண்டேன்.

இனி யாரும் பாடி மாடிஃபிகேஷன் செய்ய வேண்டாம். இந்தியாவில் இதுவரை 10 பேர் மட்டுமே பாடி மாடிஃபிகேஷன்  செய்திருப்பதாக கூறியுள்ளனர். நானும் அவ்வாறு செய்தேன் தற்பொழுது அது தவறு என்பதை புரிந்து கொண்டுள்ளேன். இனி யாருக்கும் இது போன்ற பாடி மாடிஃபிகேஷனை நான் செய்ய மாட்டேன். நான் கைது செய்யப்பட்ட பின் சில ரவுடிகளுடனும் அரசியல்வாதிகளுடனும் எனக்கு தொடர்பு இருப்பதாக பரவிய தகவல்கள் தவறு.  எனக்கு யாருடனும் எந்த தொடர்பும் இல்லை, நான் டாட்டூ வரையும் கடை நடத்தி வருகிறேன். அது தவிர நான் வேறு எதுவும் செய்யவில்லை” எனக் கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.