தண்டவாளத்தில் கிடந்த சிறுவன் உடல்.. விசாரணையில் அதிர்ச்சி.. 5பேர் அதிரடியாக கைது!
Dinamaalai January 09, 2025 01:48 AM

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே அம்பலூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராகவன் என்பவர் கடந்த 5-ஆம் தேதி நெக்குந்தி பகுதியில் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தார். இதையடுத்து, சிறுவனின் தந்தை ஜெயராகவன், சிறுவன் சாவில் மர்மம் இருப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிறுவனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுவன் கொலை செய்யப்பட்டதாக டாக்டர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையிலான போலீசார் சிறுவன் நரசிம்மனை கொன்றவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தபால்மேடு பகுதியை சேர்ந்த அப்துல்ரகுமான் (17) என்ற சிறுவனிடம் சிறுவன் நரசிம்மன் கடந்த 4ம் தேதி இரவு பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ரயில்வே போலீசார் அப்துல் ரஹ்மானை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் நரசிம்மன் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுடன் தொடர்பு வைத்து மணல் கொள்ளையிலும் ஈடுபட்டு வந்தான்.

இதையடுத்து, ராமநாயக்கன்பேட்டை பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவருக்கும், நரசிம்மனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், நரசிம்மன், பிரவீனை தாக்கினார். ஆத்திரமடைந்த பிரவீன், அம்பலூர் பகுதியை சேர்ந்த அசோக் (24), சின்னக்கழுப்பள்ளி பகுதியை சேர்ந்த சீனிவாசன் (24), பெரியப்பந்தை சவுத்தோப்பு பகுதியை சேர்ந்த சிவா (18), செட்டியப்பனூர் பகுதியை சேர்ந்த சத்யா (20) ஆகியோருடன் சேர்ந்து நரசிம்மனை கொல்ல திட்டமிட்டனர்.

இதையடுத்து கடந்த 4ம் தேதி இரவு அப்துல்ரகுமான், நரசிம்மனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வாணியம்பாடி அருகே அழைத்துச் சென்றார். அப்போது அங்கிருந்த பிரவீன், சத்யா, சிவா, சீனிவாசன், அசோக் ஆகிய 3 பேரும் அவரை சரமாரியாக தாக்கி, கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, நெக்குந்தி பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நரசிம்மனின் உடலை வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

உடனே ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் அப்துல்ரகுமான், அசோக், சீனிவாசன், சிவா, சத்யா ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான பிரவீன் ஆந்திராவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, ரயில்வே போலீசார் ஆந்திரா சென்று அவரை தேடி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.