தமிழகத்தில் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அதனை முன்னிட்டு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான டோக்கன் ஜனவரி 3ஆம் தேதி முதல் வினியோகம் செய்யப்படும். இந்த பொங்கல் பரிசு தொகை 2.21 கோடி பேருக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைத் தமிழர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.
இந்த முறை ரூபாய் ஆயிரம் ரொக்க பணம் மட்டும் வழங்கப்பட மாட்டாது. இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது. அதன்படி இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் டோக்கனங்களில் குறிப்பிட்ட தேதிகளில் ரேஷன் கடைகளில் சென்று பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை டோக்கன் பெற தவறியவர்கள் ரேஷன் கடைகளில் நேரடியாக சென்று கூட பெற்றுக் கொள்ளலாம்.