'4 குவாட்டரால் தலைக்கேறிய போதை'- மூதாட்டியை கொடூரமாக வன்கொடுமை செய்த இளைஞர்!
Top Tamil News January 10, 2025 02:48 AM

திருவள்ளூர் அருகே  60 வயது மூதாட்டியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம்  ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி (60). இவர் ஊத்துக்கோட்டை அடுத்த சென்னாங்காரணி கிராமத்தில் வசித்து வரும் தனது அக்காள் மகள் வீட்டிற்கு கடந்த 6-ந் தேதி  சென்றுள்ளார். அவர் மாலையில் இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகே உள்ள  ஏரிக்கரைக்கு பூங்கொடி சென்றுள்ளார். அங்கு அடையாளம் தெரியாத ஒருவர் பூங்கொடியை புதருக்குள் இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதில் நிலைகுலைந்த பூங்கொடி கத்தி கூச்சலிட்டுள்ளார். அதனைக் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பூங்கொடியை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள பூங்கொடியிடம் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.  மேலும் அப்பகுதியில் ஆறு வழிச்சாலைக்கான பணிகள் நடைபெற்று வருவதால் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் யாரேனும் இச்செயலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில்  முதலில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனால் வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் மற்றும் சென்னாங்காரணி பகுதியை சேர்ந்த இளைஞர்  நான்கு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடக்கத்தில் விசாரணையில் அவர்கள் யாரும் நடந்த சம்பவத்தை ஒப்புக் கொள்ளாததால் போலீசார் 4 பேரையும் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் சென்னாங்காரணி  பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ராஜா என்பவர் மருத்துவ பரிசோதனை அறிக்கை ஒத்து போனதால் மேலும் மேல் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை  ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போலீசார்  மூதாட்டியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியது. அதைத்தொடர்ந்து அவரை மீண்டும் ஊத்துக்கோட்டை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் நடந்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

ராஜா அவருடைய தந்தை, தாய் மரணம் அடைந்ததால் அவருடைய தாத்தா, பாட்டியுடன் வாழ்ந்து வருவதும், அவர் டிப்ளமோ வரை படித்துவிட்டு தொடக்கத்தில் தனியார் தொழிற்சாலையில் பணிக்குச் சென்றவர், தற்போது பணியில் இருந்து நின்று அப்பகுதியில் கூலி வேலைக்கு சென்று வருவதும் தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அன்றைய தினம் நான்கு குவாட்டர் மேல் மதுபானம் அருந்தியதால் போதை தலைக்கு ஏறியதால் மூதாட்டியிடம் தவறாக நடந்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து அவரை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மத்திய புழல் சிறையில் அடைத்தனர்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.