பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 இல்லாதது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அமைச்சர் பெரியகருப்பன்
தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 இல்லாதது பொதுமக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
நேற்று சென்னையில் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், “பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வதற்கான டோக்கன் 99 சதவீதம் வழங்கப்பட்டு விட்டது.
பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 இல்லாதது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனாலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகையானது 1.15 லட்சம் கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 சென்றுக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்" என்றார்.