தமிழகத்தில் நேற்று காலை முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்படுகிறது. அதன் பிறகு மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் பணமும் நேற்று பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பை டோக்கனில் குறிப்பிடப்பட்ட தேதியில் சென்று பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். ஜனவரி 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்பட இருக்கும் நிலையில் காலை மற்றும் மாலை கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தலா 100 பேருக்கு வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது எனவும் பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற ஏதுவாக கடைகள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று வருகிற ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது. அன்றைய தினமும் பொங்கல் பரிசு பெற ரேஷன் கடைகள் திறந்திருக்கும். இதன் காரணமாக இன்று ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.