Bigg Boss Tamil Season 8 Day 95 இல் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முன்னாள் போட்டியாளர்கள் அனைவருமே உள்ளே இருக்கும் 8 போட்டியாளர்களின் மனதை குழப்ப வேண்டும் வீக்காக வேண்டும் என்று டார்கெட் செய்து நடப்பது போல் தெரிகிறது. குறிப்பாக வர்ஷினி, சாச்சனா வன்மத்தை கக்குகின்றனர். சௌந்தர்யாவை குறை கூறிக்கொண்டே இருக்கின்றனர். சௌந்தர்யா எப்படி இந்த இடத்திற்கு வந்திருக்கலாம் அவருக்கு தகுதியே இல்லை என்பது போல எல்லோரிடத்திலும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
இதே போல் காலையில் பிக் பாஸ் ஒரு டாஸ்க் அறிவித்தார். அதில் முன்னாள் போட்டியாளர்கள் இந்த 8 பேரில் யாரை ரீபிளேஸ் செய்யலாம் என்று கேட்கும் போத அதிகப்படியான நபர்கள் ஜாக்குலின், சவுந்தர்யா, விஷால், அருண் ஆகியோர் பெயரை கூறியிருந்தார்கள். வெளியே இருந்து வந்தவர்களில் உள்ளே யார் இரண்டு பேர் இருக்கலாம் என்ற கேள்விக்கு ரவீந்தர், ரியா பேரை அதிகம் பேர் கூறினார்கள். ஆனால் சௌந்தர்யா ரீப்ளேஸ் செய்வதற்கு முன்னாள் போட்டியாளர்கள் கூறிய காரணத்தை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அவரால் தாங்க முடியாமல் மனம் உடைந்து கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக அழுது கொண்டே தான் இருந்தார். அதுக்கு அப்பறமாக பிக் பாஸ் கன்பஷன் ரூமுக்கு அழைத்து சௌந்தர்யாவுக்கு கவுன்சலிங் கொடுத்தார். அதற்குப் பிறகு அவர் கொஞ்சம் நார்மல் ஆகிவிட்டார்.
அதற்கு அடுத்ததாக ஆடிய ஆட்டம் என்ன டாஸ்க்கின் இரண்டாவது கட்டப் போட்டி நடைபெற்றது. அதாவது ஜோடி ஜோடியாக அனைவரையும் பிரித்துவிட்டு பாடல் போடும்போது நடன போட்டி போல் நடைபெற்றது. இதன் இறுதி முடிவு பிறகு வரலாம். ஆனால் ரவீந்தர் வெளியே இருந்து வந்தவுடன் உள்ளே அனைவரிடம் தனித்தனியாக Brainwash செய்வது போல் பேசிக் கொண்டிருக்கிறார். பணப்பெட்டி எடுப்பது யார் என்ற குழப்பம் நீடித்துக் கொண்டே இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்.