தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் சங்கர். இவர் தற்போது கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ளார். அதன்பிறகு கியாரா அத்வானி, அஞ்சலி மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில் அரசியல் மற்றும் ஆக்சன் கலந்த படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் இன்று திரைக்கு வர இருக்கிறது. இதேபோன்று பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படமும் இன்று திரைக்கு வருகிறது. முதலில் இந்த படத்தில் சூர்யா கமிட்டான நிலையில் பின்னர் சில காரணங்களுக்காக விலக தொடர்ந்து அருண் விஜய் நடித்தார்.
பாலா தனித்துவமான படங்களை இயக்குவதில் வல்லவர். இதன் காரணமாக பாலாவின் வணங்கான் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன் பிறகு சோனு நிகம் மற்றும் கலையரசன் ஆகியோர் நடித்துள்ள மெட்ராஸ் காரன் ஆகிய திரைப்படமும் இன்று திரைக்கு வர இருக்கிறது. ஆர்டிஎக்ஸ் படத்தின் மூலம் பிரபலமான ஹீரோ இந்த படத்தில் நடித்துள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துள்ளது. மேலும் இந்த 3 படங்களும் இன்று ஒரே நாளில் வெளியாவது ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.