தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சியில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தீவிரமாக திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தவெக நிர்வாகிகளுடன் விஜய் இன்று முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நாளை அவர் ஆலோசனை நடக்க இருப்பதாகத் தெரிகிறது.
தவெக கட்சியை ஆரம்பித்த விஜய், மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்கின்றனர் நிர்வாகிகள். இதையடுத்து மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தவெக கட்சியில் மாவட்ட பொறுப்பாளர்களை இந்த மாத இறுதிக்குள் நியமிக்கும்படி தலைவர் விஜய் ஏற்கனவே கூறியிருந்தார்.
கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், கட்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த மாதத்திற்குள் பொறுப்பாளர்களை நியமிக்கும்படி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து 4 மாதங்களாக நடைபெற்று வந்த மாவட்ட செயலாளார் தேர்வு குறித்து இன்று இறுதிச் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.