தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசியதாவது, கடலூர் மாவட்டத்தில் என்னுடைய தொகுதியில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை தந்திருக்கின்றேன். அவை அனைத்தும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நான் சில கோரிக்கைகளை முன்வைக்க இருந்தேன். அப்போது பின் வரிசையில் இருந்த திமுக உறுப்பினர்கள் என்ன பேச போகிறேன் என்பதை புரிந்து கொள்வதற்கு முன்பாகவே எனக்கு எதிராக கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது ஜனநாயக மாண்பு அல்ல என்று கூறிய அவர், பேரவை தலைவரும் ஆளுங்கட்சி கொரடாவும் இதனை கண்டிக்க வேண்டும் என்று கூறினார். அதோடு எந்த பிரச்சனையை நான் எழுப்ப முற்படுகின்றேன் என்பதை தெரிந்து கொள்ளாமல் அரைகுறையாக அரைவேக்காட்டுத்தனமாக என்னை எதிர்ப்பது என்பது ஜனநாயக மாண்புக்கும், மரபுக்கும் எதிரானது ஆகும் இதை கொரடாவோ பேரவை தலைவரோ அனுமதிக்க கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.