தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் 280 ரூபாய் உயர்ந்ததால் அதிர்ச்சி..!
WEBDUNIA TAMIL January 09, 2025 04:48 PM

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் சமீப காலமாக தங்கம் விலை குறைந்து கொண்டே வந்ததால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 35 ரூபாய் உயர்ந்து 7,260 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 280 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய் 58,080 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,920 எனவும் ஒரு சவரன் ரூபாய் 63,360 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.