"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
Tamilspark Tamil January 10, 2025 03:48 AM

நித்யா மேனனின் திரை பயணம்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நித்யா மேனன். இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் நித்யா மேனன் வெப்பம், உறுமி, மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2, 24, இருமுகன், திருச்சிற்றம்பலம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற நித்யா மேனன்

இதில் மெர்சல், ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்கள் மிகப் பெரும் வெற்றியடைந்து இவரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. மேலும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக தேசிய விருதையும் நித்யா மேனன் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற நிலையில் தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் ப்ரமோஷன் பணிக்காக படகுழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

சினிமாவை விட்டு விலக நினைத்தேன்

இது போன்ற நிலையில் நித்யாமேனன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய போது சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று நினைத்தேன் எனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் கிடையாது ஆனால் என் அம்மா தான் தொடர்ந்து நடிக்க வலியுறுத்தி கொண்டே இருப்பார். நடித்தது போதும் விலகி விடலாம் என்று நினைக்கும் சமயத்தில் திருச்சிற்றம்பலம் படத்திற்காக தேசிய விருது கிடைத்தது இதனை தொடர்ந்து படங்களில் நடிக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டேன் என்று நித்யா மேனன் கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.