குழி தோண்டும் பணியில் ஈடுபட்ட போது அதிர்ச்சி.. மண்ணில் புதைந்து தொழிலாளி பரிதாப பலி!
Dinamaalai January 09, 2025 01:48 AM

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூரு அருகே ஹோய்கேபைல் பகுதியில் பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. நேற்று அப்பகுதியில் குழி தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கமல் உசேன் என்ற தொழிலாளி. அவர் குழி தோண்டிக் கொண்டிருந்தபோது, அங்கு குவிந்திருந்த மண் திடீரென அவர் மீது விழுந்தது.

மண்ணில் புதையுண்ட கமல் உசேன் மூச்சு திணறி உயிருக்கு போராடினார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.