hansika
hansika
Actress Hansika: தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. சின்ன குஷ்பூ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்த ஹன்சிகா மோத்வானி. தமிழில் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, பிரியாணி, சிங்கம் 2, மான் கராத்தே, புலி, ஆம்பள, வாலு உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த ஹன்சிகா மோத்வானிக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் போக ஹிந்தி பக்கம் சென்றார். ஹிந்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்பு வராத காரணத்தால் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த ஹன்சிகா தனது சிறு வயது நண்பரான சோஹெல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஹன்சிகா வெப் சீரியஸ்களில் நடித்து வருகின்றார்.
அண்ணியின் புகார்: ஹன்சிகா மோத்வானியின் சகோதரர் பிரசாந்த் மோதுவானி. இவர் பிரபல தொகுப்பாளியான முஸ்கான் நான்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. பின்னர் நடிகை ஹன்சிகாவின் திருமணம் முடிந்து பத்து நாட்களில் விவாகரத்துக் கோரி இருந்தார்.
இந்நிலையில் தற்போது முஸ்கான் நான்சி மும்பை காவல் நிலையத்தில் ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரின் அம்மா மோனா மோத்வானி மீது புகார் ஒன்றை கொடுத்திருக்கின்றார். அதாவது எனக்கும் என் கணவருக்கும் 2020 ஆம் ஆண்டு திருமணமானது. திருமணமான இரண்டு வருடத்தில் இருந்து என்னை கொடுமைப்படுத்த தொடங்கினார்கள்.
நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். என் கணவருடன் நான் சேர்ந்து வாழ முயற்சி செய்த போதும் எங்கள் குடும்ப விஷயங்களில் தலையிட்டு ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரின் அம்மா எங்களை பிரித்து வைக்க பார்க்கிறார்கள். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதில் அவருக்கு சுத்தமாக விருப்பமில்லை. எங்களின் குடும்ப விஷயத்தில் ஹன்சிகாவும் அவரின் அம்மா மோனாவும் தொடர்ந்து தலையிட்டு கொண்டே இருந்ததால் எங்களுக்குள் இருந்த பிரச்சனை தீர்க்க முடியாததாக மாறிவிட்டது.
கணவரின் கொடுமையால் எனக்கு பெல் பேல்சி என்கின்ற முகத்தின் ஒரு பகுதி செயல் இழந்து விட்டது. ஹன்சிகா, மோனா மற்றும் கணவர் பிரசாந்த் என்னிடம் இருந்து பணம் மற்றும் அதிக விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை கேட்கிறார்கள். வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள். சொத்து விஷயத்தில் மோசம் செய்கிறார்கள்.
நான் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தும் அதற்கு அவர்கள் அனைவருமே எதிராக இருக்கிறார்கள் என்று மும்பை போலீசில் புகார் கொடுத்திருக்கின்றார். முஸ்கான் நான்சி அடுத்த புகாரின் பேரில் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் இணையதள பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் எதற்காக அவர்களின் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுகிறீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.