காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் திருமுடிவாக்கம் அருகே சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. காரின் முன்பக்கத்தில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இந்நிலையில், இதனை பார்த்த கார் ஓட்டுநர் உடனடியாக காரை சாலையில் நிறுத்திவிட்டு காரை விட்டு ஓடத் தொடங்கினார்.
ஓட்டுநர் காரைவிட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் காரின் முன்பக்கத்தில் இருந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.