மீண்டும் கார் பந்தய பயிற்சிக்கு திரும்பினார் நடிகர் அஜித்குமார்.
துபாயில் வருகின்ற 11 மற்றும் 12 ம் தேதி நடக்கவுள்ள கார் பந்தய போட்டியில் கலந்துக் கொள்வதற்காக நேற்று நடிகர் அஜித் கார் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டது. அதில் அவருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்றும் நலமுடன் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இரண்டு கட்டமாக நடைபெற்ற தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமார் கலந்துக் கொண்டு கார் ஓட்டினார். அந்த விபத்தினால் அவருக்கு எந்த வித காயங்களும் சிரமங்களும் ஏற்படவில்லை என்றும் அவர் நலமுடன் உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் நாளை நடக்கக்கூடிய கார் அணிவகுப்பிலும் அவர் கலந்துக் கொண்டு கார் ஓட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
11-ம் தேதி நடக்க கூடிய பந்தயத்தில் அவர் கலந்துக் கொள்வாரா என்பது குறித்து 10-ம் தேதி அறிவிப்பு வரும் என தொலைபேசி வாயிலாக நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.