ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெறும். இந்த சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த டோக்கனைப் பெறுவதற்காக திருமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்கு கூட்டம் நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் மூச்சுத்திணறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைப்பார்த்த சக பக்தர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.