வீர தீர சூரன் படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும்?
Seithipunal Tamil January 11, 2025 07:48 AM

பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' என்ற படத்தில் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். 

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. முதலில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. அதன் பிறகு, முதல் பாகம் உருவாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே இந்தப் படத்தின் டைட்டில் டீசர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின. தமிழகத்தில் இந்தப் படத்தின் திரையரங்க விநியோக உரிமையை 5 ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், வீர தீர சூர படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகும் என்று அறிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.