“இன்னும் எத்தனை காலம்தான் ஏமாத்துவீங்க”…. தமிழக மக்களிடம் இனி உங்கள் பொய் கனவு பலிக்காது… முதல்வர் ஸ்டாலினை விளாசிய விஜய்..!!
SeithiSolai Tamil January 11, 2025 08:48 PM

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியது. ஆனால் இதுவரை நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. இது தொடர்பாக சட்டசபை கூட்டத்தொடரின் போது நேற்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஒன்றிய அரசுக்கு தான் நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் இருக்கிறது என்று கூறினார். அதன் பிறகு திமுக ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்தில் நீட் வரவில்லை எனவும் உங்கள் ஆட்சியில் தான் வந்தது எனவும் முதல்வர் ஸ்டாலின் கூற அதற்கு பிள்ளையார் சுழி போட்டதே உங்கள் ஆட்சியில் தான் என்று எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்தார்.

அதற்கு நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் நீட் தேர்வை எதிர்க்க தான் செய்தோம் என்று முதல்வர் கூறினார். இந்நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக அரசு ஆட்சிக்கு வருவதாக மக்களை ஏமாற்றிவிட்டது எனவும் நீட் தேர்வை முதலில் ரத்து செய்வதாக கூறிவிட்டு தற்போது அதன் ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு தான் இருக்கிறது என்று கூறுவது எந்த விதத்தில் சரி என்றும் சரமாரியாக விளாசியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட பதிவில் இன்னும் எத்தனை காலம் தான் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே மக்களை ஏமாற்றுவார்கள் என்ற பாடல் வரிகள் தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு பொருத்தமாக இருக்கும். தேர்தல் சமயத்தில் போலி வாக்குறுதிகள் கொடுத்து மக்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதுதான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக இருக்கிறது. இதற்கு பல்வேறு சான்றுகள் உதாரணமாக இருக்கும் நிலையில் அதில் மிக முக்கியமானது நீட் தேர்வு.

கடந்த 2021 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு நீட் தேர்வு ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று பிரச்சாரம் செய்து தமிழக மக்களை நம்ப வைத்த தற்போதைய ஆட்சியாளர்கள் இப்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு தான் இருக்கிறது என்று கூறுகிறார்கள். மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று சொல்வது வாக்களித்த மக்களை ஏமாற்றம் செயல் அல்லவா. மேலும் எந்த ஒரு பொய்யையும் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என்ற அவர்களின் கனவு இனியும் பலிக்காது என்று கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.