Keerthi suresh: தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் கீர்த்தி சுரேஷ் இவரின் அம்மா மேனகா ரஜினியுடன் நெற்றிக்கண் படத்தில் நடித்தவர். அம்மாவும், அப்பாவும் சினிமாவில் இருந்ததால் தான் ஒரு நடிகையாக வேண்டும் என்கிற ஆசை கீர்த்திக்கு சின்ன வயதிலேயே வந்துவிட்டது.
சிவகார்த்திகேயன், தனுஷ், விஷால், விக்ரம், சூர்யா என பலருக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். அதேபோல், தெலுங்கு சினிமாவிலும் மகேஷ் பாபு, நானி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வாங்கினார்.
மேலும், சாணி காயிதம், பென் குயின், ரகு தாத்தா போன்ற பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்திருக்கிறார். பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஆண்டனி என்பவரை காதலித்து வந்தார். அதை பல வருடங்களாக ரகசியமாக வைத்திருந்து சில நாட்களுக்கு முன்பு கோவாவில் திருமணமும் செய்து கொண்டார்.
இவரின் திருமணத்தில் விஜய், நடிகை திரிஷா உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டனர். அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. கீர்த்தி சுரேஷின் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி என இரண்டு முறைகளிலும் நடந்தது. இந்நிலையில், இன்று அவர் தல பொங்கலை கொண்டாடியிருக்கிறார்.
அப்போது அவர் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களே அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விழாவில் நடிகர் விஜயும் கலந்து கொண்டு அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். அந்த வீடியோவும் ஏற்கனவே வெளியானது.