காதலியுடன் பிரேக்கப்; கெஞ்சியும் காதலை ஏற்காததால் உயிரையே விட்ட காதலன்.! கம்பி என்னும் காதலி.!!
Tamilspark Tamil January 15, 2025 06:48 AM
முன்னாள் காதலி பிரேக்கப் செய்தபின் மீண்டும் சேர மறுத்ததால் காதலன் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் செயல்பட்டு வரும் அமிட்டி பல்கலைக்கழகத்தில், எல்எல்பி பட்டம் பயின்று வருபவர் டப்பஸ். இவர் சம்பவத்தன்று பார்ட்டி நடைபெற்ற கட்டிடத்திற்கு சென்றுள்ளார். அங்கு இவரது முன்னாள் காதலி மற்றும் அவரது தோழி இருந்துள்ளனர்.

லிவிங் டுகெதர்

இவரின் காதலி இபிஷா ஷாம்லி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இருவரும் ஒரே வகுப்பில் பயின்று வந்த நிலையில், காதலித்து லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்துள்ளனர். பின் காதலி பிரேக்கப் செய்ததை தொடர்ந்து அவர் மீண்டும் இணையுமாறு கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார்.

இதையும் படிங்க:

காதலியிடம் கெஞ்சிய காதலன்

ஆனாலும் காதலி மறுத்த நிலையில், சமீபத்தில் நடந்த பார்ட்டியில் மீண்டும் அவரிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் காதலி மறுக்கவே மனமுடைந்த டப்பஸ், 7 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இபிஷாவை கைது செய்தனர்.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.