ஜெயிலர் 2 படம் எப்போது ஆரம்பம்? - வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு..!
Seithipunal Tamil January 15, 2025 06:48 AM

பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் 'ஜெயிலர்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதன் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து வருவதால் இதன் படப்பிடிப்பு நிறைவடந்த உடன் ஜெயிலர் 2 படப்பிடிப்பை தொடங்குவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அடுத்த படம் குறித்த அப்டேட் வரும் 14ம் தேதி மாலை 6 மணிக்கு டீசராக வெளியாகும் என்று அறிவித்தது. அதன்படி, ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.