ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் பிரபலமான ராம் சரண் கதாநாயகனாகவும், கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்திருந்த 'கேம் சேஞ்சர்' திரைப்படம் கடந்த 10-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் ரசிகர்களுக்கு நடிகர் ராம் சரண் நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர், 'கேம் சேஞ்சர் படத்திற்கு நாங்கள் கொடுத்த அனைத்து உழைப்பையும் உண்மையிலேயே பயனுள்ளதாக்கியதற்காக என் இதயத்திலிருந்து மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதனை சாத்தியமாக்க திரைக்கு முன்னாலும் பின்னாலும் உழைத்த அனைவருக்கும் நன்றி.
கேம் சேஞ்சர் எப்போதும் என் இதயத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கும். உங்களில் எல்லையில்லா அன்புக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மகிழ்ச்சியான புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார்.
இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் ஜெயராம் நடித்துள்ளனர். மேலும் அஞ்சலி, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். தமன் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் நடிகர் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
கேம் சேஞ்சர் திரைப்படத்தின் கதை கார்த்திக் சுப்புராஜுடையது. அதற்கு திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ஷங்கர்.சுமார் 450 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். குறிப்பாக இப்படத்தின் பாடல் காட்சிகளுக்கு மட்டும் சுமார் 90 கோடிக்கு மேல் செலவழித்து உள்ளனர்.