#featured_image %name%
காசி தமிழ் சங்கமம் 3.0 பிப்ரவரி 14 முதல் நடக்கிறது. காசி, ப்ரயாக்ராஜ், அயோத்தி இந்த 3 ஊர்களுக்கும் இலவசமாக சென்று வரலாம். இந்த லிங்கில் பதிவு செய்யவும்.
சென்ட்ரல் / பெரம்பூரில் ரயில் ஏறுவது முதல் மீண்டும் சென்னை வந்து சேருவது வரை, மத்திய கல்வித்துறை அமைச்சகம் பார்த்துக் கொள்ளும். மனம் நிறைய சுவாமி தரிசனம் செய்யலாம்.
ரயில் பயணம் போக 2 நாட்கள், அங்கு 4 நாட்கள், திரும்ப ரயில் 2 நாட்கள், மொத்தம் 8 நாட்கள் – உணவு, நட்சத்திர ஓட்டலில் தங்குமிடம், உள்ளூர் பயணம், தரிசனம் எல்லாமே பிரத்யேக ஏற்பாடு உண்டு. பாதுகாப்பிற்கு போலீசும் உடன் வரும்.
நாமாக கடைகளில் ஏதாவது வாங்க விரும்பினால் அந்த செலவு மட்டுமே. தமிழ் தெரிந்த கைடுகள் நம்முடன் வருவார்கள். அரசு உயரதிகாரிகளும் உடன் இருப்பார்கள் .
இந்த முறை விசேஷமாக கும்பமேளா நேரத்தில் திரிவேணி சங்கமத்தில் நீராடும் வாய்ப்பு உள்ளது. கூட்டத்தில் முட்டி மோதாமல், மிக நெருங்கி சென்று செய்ய ஏற்பாடு இருக்கும். காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் அயோத்தி ராமர் தரிசனமும் உண்டு.
விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்யவும். குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். நாம் எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை, எல்லாம் மத்திய அரசே பார்த்துக் கொள்கிறது. சுருக்கமாக சொன்னால் பாக்கெட்டில் 500 ரூபாய் பணத்துடன் கூட ரயில் ஏறலாம்.
விளையாட்டாக விண்ணப்பம் செய்வதை தடுக்க 2 விஷயங்கள் மட்டும் உள்ளன.
குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டால், 1500 ரூபாய் டெபாசிட் மட்டும் புறப்படுவதற்கு 2 நாட்கள் முன்பு ஆன்லனில் கட்ட வேண்டும், அந்த பணமும் நாம் சென்னை வருவதற்குள் நம் கணக்கிற்கு வந்துவிடும்.
சென்ற ஆண்டு வரை வினாடி வினா இல்லை, இந்த ஆண்டு புதிதாக கொண்டு வந்துள்ளார்கள்.
காசி மற்றும் ஆன்மீகம் பற்றிய சில கேள்விகள் ஆன்லைனில் இருக்கும், அதற்கு விடையளிக்க வேண்டும். அதற்கு வழிகாட்டும் புத்தகம் உள்ளது.
Thamizhar Marabil Kashi – Book
News First Appeared in