சேலம் மாவட்டத்தில் உள்ள ராக்கி பட்டி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீகவி(14). இந்த நிலையில் மாட்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஸ்ரீ கவி அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் ராஜா(9) என்ற சிறுவனுடன் ஆடுகளை குளிப்பாட்டுவதற்காக ஓடைக்கு ஒட்டி சென்றுள்ளார். அந்த சிறுவர்களுடன் ஸ்ரீகவியின் தாத்தா ராஜேந்திரனும் இருந்துள்ளார். இந்த நிலையில் குட்டையில் ஆடுகளை குளிப்பாட்டிய போது எதிர்பாராதவிதமாக ஸ்ரீ கவியும் பிரதீப் ராஜாவும் தண்ணீரில் மூழ்கினர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்தனர். அதற்குள் இரண்டு பேரும் மூச்சு திணறி உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.