சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதில் 08 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் அடுத்த மாதம் 21ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் சாம்பியன்ஸ் டிராபி தொடரை தென் ஆப்பிரிக்க அணி தொடங்க உள்ளது.
தற்போதைய தென் ஆப்பிரிக்க அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும், எதிர்கால நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக பவுமா வழி நடத்துகிறார். இதில் இந்தியாவில் நடந்த ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில பங்கேற்ற 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அணியில் ஐடன் மார்க்ரம், ஹெய்ன்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் போன்ற குறிப்பிடத்தக்க பெயர்கள் இடம் பெற்றுள்ளனர். டோனியர் டி சோர்சி மற்றும் ரியான் ரிக்கெல்டன் போன்ற புதுமுகங்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த வீரர்கள் தென் ஆப்ரிக்காவின் அணியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜே முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது விலகல் தென் ஆப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க அணி விவரம்;-
பவுமா (கேப்டன்), டோனி டி சார்சி, மார்கோ ஜான்சன், கிளாசென், கேஷவ் மகராஜ், மார்க்ரம், மில்லர், வியான் முல்டர், லுங்கி நிகிடி, ரபடா, ரையன் ரிக்கெல்டான்,