தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.