திருப்பூர் மாவட்டத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் இருந்துள்ளார். இவர் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில் ஒரு தனியார் கபடி பயிற்சி மையத்தில் சேர்ந்து கபடி பயிற்சி எடுத்துள்ளார். இந்த பயிற்சி மையம் சேலத்தில் இருக்கிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக கபடி பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது சந்துருவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் ஆயுர்வேத சிகிச்சை போன்றவைகளை எடுத்துள்ளார்.
இருப்பினும் பலன் அளிக்கவில்லை. இதன் காரணமாக சந்துரு மன வேதனை அடைந்தார். நேற்று திடீரென அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.