ஐயோ..! “பழனிக்கு பாதயாத்திரை சென்றவர்களுக்கு இப்படியா நடக்கணும்”… துடிதுடித்து பலியான 2 பேர்… கர்ப்பிணி பெண் வந்த வாகனம் மோதியது…!!
SeithiSolai Tamil January 16, 2025 07:48 PM

மதுரை மாவட்டத்தில் அழகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கேசவன் (17) என்ற மகன் இருந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த அடைக்கல ராஜா. இவர்கள் பாதயாத்திரை சென்றுள்ளார். இவர்களுடன் அந்த பகுதியைச் சேர்ந்த பலர் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். இவர்கள் இன்று அதிகாலை ஒட்டன்சத்திரம் அருகே சாலைப்புதூர் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது புவனேஸ்வரன் என்பவர் தன்னுடைய காரில் வந்து கொண்டிருந்தார். இவருடைய அத்தை மகள் துர்காவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் காரில் ஏற்றிக் கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கேசவன் மற்றும் அடைக்கல ராஜா இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், மற்றவர்களுக்கு காயம் ஏற்படவே அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் கேசவனின் தந்தையான அழகருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் புவனேஸ்வரனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.