ரஜினியின் பயோபிக்கை எடுக்கிறீர்களா என கேட்டதற்கு எனக்கும் ஆசைதான். நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான் தோணுதுன்னு இயக்குனர் ஷங்கர் சொல்லி இருந்தார். அது நிறைவேறுமான்னு பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மியிடம் ஆங்கர் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
ரஜினி பயோபிக்: அதெல்லாம் நிச்சயமா நிறைவேறாது. எப்பவுமே பயோபிக் என்பது யாருடைய வாழ்க்கை வரலாற்றை எடுக்கிறோமோ அவர்களுடைய அனுமதியோடுதான் எடுக்க முடியும். இன்னொன்னு பயோபிக் பார்த்தீங்கன்னா அவரோட பிளஸ், மைனஸ் இரண்டையும் சொன்னால்தான் நேர்மையாக இருக்கும். ஆனால் ரஜினி அதற்கு அனுமதிப்பாரா என்பதுதான் சந்தேகம்.
விரோதிகளே இருக்கக்கூடாது: ஏன்னா ரஜினியைப் பொருத்தவரை எல்லாருக்கும் நல்லவரா இருக்கணும். எல்லாரும் நண்பர்களா இருக்கணும். நமக்கு விரோதிகளே இருக்கக்கூடாதுன்னு நினைக்கிற கேரக்டர். அவருடைய படத்துல பார்த்தீங்கன்னா யாரோ ஒருத்தரால பாதிக்கப்பட்டுருப்பாரு. யாரோ ஒருத்தரைக் குறித்து அவர் நெகடிவ்வா பேசிருப்பாரு.
சுவாரசியத்துக்காக: யாரோ ஒருத்தருக்கும், அவருக்கும் போட்டி இருக்கும். இதெல்லாம் படத்துல காட்சிகளா இல்லன்னா அந்தப்படம் பார்த்தீங்கன்னா பிளாட்டா இருக்கும். அப்படி ஒரு ஆபத்து ரஜினி பயோபிக்ல இருக்கு. அதனால ஷங்கர் பேச்சு சுவாரசியத்துக்காக அப்படி சொல்லி இருக்கலாம்னு தான் நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
2.O, இந்தியன் 2: எந்திரன் 2.O படத்துக்காக ரஜினியைப் பாடாய்படுத்தி விட்டார் ஷங்கர். இனி அவர் படங்களில் தான் நடிக்கவே மாட்டேன் என்றெல்லாம் ரஜினி, ஷங்கர் குறித்து சமீபத்தில் வலைதளங்களில் பேச்சு வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் 2 படத்தில் கூட நடப்பு ஊழலைப் பற்றி சொன்ன தயங்கினார் ஷங்கர். அப்படி இருக்க ரஜினியின் சொந்த வாழ்க்கையில் நடந்த அத்தனை விஷயங்களையும் அவர் சொல்ல முடியுமா?
மைனஸ்கள்: ஒருகாலத்தில் ரஜினி செய்ன் ஸ்மோக்கராகவும், மதுபிரியராகவும் இருந்துள்ளார். தவிர இன்னும் சொல்ல முடியாத விஷயங்களும் அவருக்கு மைனஸ்களாக உள்ளன. இதெல்லாம் படத்தில் எப்படி கொண்டு வருவார் என்ற கேள்வியும் எழுகிறது.அதை ரஜினிதான் ஏற்றுக் கொள்வாரா என்றெல்லாம் சவால்கள் உள்ளன.