நடிகர் அஜித் மகன் ஆத்விக் GO KART கார் ரேஸில் முதலிடம் பிடித்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் ஆத்விக்கைக் கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் நடிகர் அஜீத்குமார் கலந்து கொண்டார். போட்டியின் முடிவில் அஜித் அணி 3வது இடத்தை பிடித்து வெற்றிவாகை சூடியது. இதனைத் தொடர்ந்து அஜீத்துக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இது குறித்து அஜித் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘விஜய் வாழ்க... அஜித் வாழ்க என்று சொல்கிறீர்கள்… நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள்?’ என பேசியது வைரலானது.
அவர் பேசுகையில், உங்களுக்கு நல்ல எண்ணங்கள் இருந்தால் உங்களுடைய வாழ்க்கை மிகவும் அழகானதாக இருக்கும். உங்களுடைய லட்சியங்களை அடைய உங்களின் திறனை அதற்கேற்ப வளர்த்துக் கொள்ளுங்கள்’ என பேசியிருந்தார்.
கார் ரேஸில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அஜித் தனது அணியுடன் பரிசு வாங்கும் போது, தனது மகனை மேடையில் அழைத்து அவரையும் வெற்றிக் கொண்டாட்டத்தில் இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில் தற்போது சென்னையில் நடந்த GO KART கார் ரேஸில் அஜித் மகன் ஆத்விக் முதல் பரிசை வென்றுள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. ஆத்விக் அஜித் கால்பந்து போட்டியில் அசத்தி வரும் நிலையில், தற்போது கார் ரேஸிலும் தந்தை அஜித்தைப் போலவே கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து ஆத்விக்கிற்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
!