சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மையூர் திருவீதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஏழுமலை. இவருக்கு ஓவியா(3) என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று ஏழுமலையின் மனைவி தனது குழந்தை ஓவியாவை குளிக்க வைப்பதற்காக வெந்நிரை வாளியில் ஊற்றி வைத்துவிட்டு சென்றுள்ளார். அங்கு சிறுமி ஓவியா விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஓவியா சூடான வெந்நீர் உள்ள வாளியை பிடித்து இழுத்துள்ளார். இதனால் வெந்நீர் சிறுமி மீது உடல் முழுவதும் கொட்டியது.
இதனால் அலறி துடித்த குழந்தையின் சத்தம் கேட்டு பெற்றோர்கள் ஓடி வந்தனர். பலத்த காயங்களுடன் இருந்த சிறுமியை அருகில் உள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி ஓவியா நேற்று பரிதாபமாக இறந்துள்ளார். வெந்நீர் விழுந்து மூன்று வயது சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.