பத்திரமா ஊர் திரும்புங்க... நாளை முதல் மீண்டும் கனமழை... 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Dinamaalai January 17, 2025 12:48 PM

தமிழகத்தில் பொங்கல் விடுமுறை நிறைவுக்கு வரும் நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பவர்கள் பத்திரமாக ஊர் திரும்புங்க மக்களே. நாளை ஜனவரி 18ம் தேதியும், ஜனவரி 19ம் தேதியும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று ஜனவரி 17ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை ஜனவரி 18ம் தேதி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜனவரி 19ம் தேதி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.