பொங்கல் பரிசு தொகுப்பு இன்னும் வாங்கவில்லையா? வெளியான முக்கிய அப்டேட்!
Seithipunal Tamil January 17, 2025 04:48 AM

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ரேசன் கடைகளில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படுகிறது.

மேலும், இலவச வேட்டி-சேலைகளும் இந்தத் திட்டத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த வழங்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கி, தற்போதுவரை சுமார் 70% மக்கள் இந்தப் பொருட்களை பெற்றுள்ளனர்.

ஆனால், பொங்கலுக்காக சிலர் சொந்த ஊர்களுக்கு சென்றதால், இன்னும் பெற்றுக்கொள்ளாதவர்கள் உள்ளனர். 

இந்த நிலையில், இன்னும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக்கொள்ளாத பொது மக்களுக்கு விடுமுறை முடிந்து திரும்பி வந்தாலும் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

எனவே, இதுவரை வாங்காதவர்கள் அருகிலுள்ள ரேசன் கடைக்கு சென்று பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.