இந்தியாவில் காற்றின் தரம் குறித்த அச்சம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதனை சரிசெய்யும் பணி கடும் சவாலாக உள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கற்று மாசினால் மக்கள் பல நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான காற்று தரக் குறியீட்டு தரவை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதில், தமிழ்நாட்டின் நெல்லை முதல் இடத்தையும், அருணாச்சல பிரதேசத்தின் நாகர் லகுன் 2-வது இடத்தையும், கர்நாடகாவின் மடிக்கேரி 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. தமிழ்நாட்டின் தஞ்சாவூர் 5-வது இடத்தில் உள்ளது.
இந்திய தலைநகரான புது டெல்லி காற்றின் தரம் மிக மோசமாக உள்ள நகரமாகத் திகழ்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத் 2-வது இடத்தையும், மேகாலயாவின் பிரின் ஹேட் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.
மோசமான காற்று தரம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் சண்டிகர், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.