சேவல் சண்டை, கிடாக்கள் மோதிக் கொள்ளும் ஆடு சண்டை, காளை திமிலை சிலுப்பும் ஜல்லிக்கட்டு எல்லாம் கேள்விபட்டிருப்பீங்க. பன்றி சண்டையைக் கேள்விபட்டிருக்கீங்களா? ஆந்திர மாநிலத்தில் கோதாவரி மாவட்டத்தில் சங்கராந்தியின் போது சேவல் சண்டை பொதுவாக பெரிய அளவில் நடத்தப்படுகிறது.
ஆனால் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள குஞ்சனப்பள்ளி கிராம மக்கள் இது அவர்களின் பாரம்பரியம் என்று கூறி, சங்கராந்தியின் போது பன்றி சண்டை போட்டியை ஏற்பாடு செய்து அதிர வைக்கிறார்கள்.
சங்கராந்தி நாளில் சண்டையிடுவதற்காக இப்பகுதி மக்கள் பன்றிகளை வளர்க்கிறார்கள். மேலும், சண்டையிடுவதற்காக தாங்கள் வளர்க்கும் பன்றிகளுக்கு இப்பகுதி மக்கள் சிறப்பு பயிற்சி அளிக்கிறார்கள்.
அந்தப் பயிற்சியின் அடிப்படையில், பன்றிகள் மைதானத்தில் சண்டையிடுகின்றன. போட்டியில் வெற்றி பெறும் பன்றிகளின் உரிமையாளர்களுக்கு வெகுமதி அளிக்கப்படுகிறது.
!