சாதி மறுப்பு திருமணம்... காதல் ஜோடி காவல் நிலையத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு!
Dinamaalai January 17, 2025 02:48 AM

பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்ட காதல் ஜோடி ஒன்று, மாலையும் கழுத்துமாக காவல் நிலையத்திற்குள் புகுந்ததால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கமலாபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கருத்தனூர், பொட்டியபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் துர்காதேவி.

இவர்கள் இருவரும் கமலாபுரம் அரசுப் பள்ளியில் ஒன்றாக படித்துக் கொண்டிருந்த காலம் முதலே காதலித்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது வீட்டில் இரு வீட்டு பெற்றோர்களும் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கோரி ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்த்ததால், போலீசார் தம்பதியரின் பெற்றோரை அழைத்து சமரசம் செய்தனர். அப்போது, இரு தரப்பினரும் சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டு,  பெற்றோருடன் புதுமண தம்பதியினரை அனுப்பி வைத்தனர். இரு தரப்பினரின் உறவினர்களும் காவல் நிலையத்தில் கூடியதால், சிறிது நேரம் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. 

!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.