சாப்ட்வேர் இன்ஜினியரிங் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறது என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதவிட்டிருக்கிறார்.
உலகின் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் தளம் போன்ற நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதனிடையே 'டிக்டாக்' செயலியை எலான் மஸ்க் வாங்க இருப்பதாகவும் , தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது என்ற அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டிருக்கிறார்.
elon muskஅவர் வெளியிட்டடிருந்தப் பதிவில், " நீங்கள் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து, பல்வேறு விதமான செயலிகளை உருவாக்க விரும்பினால், உங்களின் விவரங்களை, code@x.comக்கு அனுப்புங்கள். எங்களது நிறுவனத்தில் இணைந்து விடுங்கள். நீங்கள் பள்ளிக்குச் சென்றீர்களா? நீங்கள் எந்த பெரிய பெயர் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிந்தீர்களா, பட்டம் பெற்றீர்களா? என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. உங்களது திறமையை மட்டும் காட்டுங்கள்" என்று எலான் மஸ்க் பதிவிட்டிருக்கிறார்.