விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் 7 சீசன்களை கடந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த 7 சீசன்களில் இல்லாதவாறு இந்த சீசனில் பல மாற்றங்கள் நடந்துள்ளது. அதில் ஒன்றுதான் தற்போது நடந்து வரும் பணப்பெட்டி டாஸ்க்.
கடந்த சீஷங்களில் வீட்டில் உள்ளே பணப்பெட்டியை வைத்து வேண்டும் என்பவர்கள் எடுத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இம்முறை பணப்பெட்டி வீட்டிற்கு வெளியில் வைக்கப்பட்டு பணப்பெட்டி வேண்டும் என்பவர்கள் வீட்டிற்கு வெளியில் சென்று பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் மீண்டும் வீட்டிற்குள் வர வேண்டும் என்று கூறப்பட்டது.
அதோடு குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள் வரவில்லை என்றால் அவர்கள் எழுமினேட் செய்யப்படுவார்கள் என்றும் பிக் பாஸ் அறிவித்திருந்தார். ஏற்கனவே இந்த டாஸ்க்கில் முதலில் களத்தில் இறங்கிய முத்துக்குமார் 50,000 ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் வந்து சேர்ந்தார். அவரை தொடர்ந்து ரயான் மற்றும் பவித்ரா டாஸ்க்கில் பங்கேற்று தல 2 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் வீட்டிற்குள் வந்து சேர்ந்தனர்.
இந்நிலையில் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக அனைத்து வாரமும் நாமினேட் செய்யப்பட்டு மக்களால் காப்பாற்றப்பட்டு வந்த ஜாக்குலின் பணப்பெட்டி டாஸ்க்கில் பங்கேற்றார். ஆனால் அவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள் வராததால் வீட்டின் கதவு மூடப்பட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
பிக் பாஸில் வரலாறு படைத்த ஜாக்குலின் டாஸ்க் மூலம் எலிமினேட் செய்யப்பட்டது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.