அடடே பவன் க்யூட்டா இருக்கான்…. இளைய மகனின் புகைப்படத்தை பகிர்ந்த சிவகார்த்திகேயன்…..!!
SeithiSolai Tamil January 16, 2025 02:48 PM

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்த படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் கங்கணா ரனாவத் இயக்கத்தில் ஒரு படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பொங்கல் தினத்தன்று சிறப்பாக தனது குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன், அவரது மனைவி, மகள், மகன் மற்றும் இளைய மகன் பவன் என ஐந்து பேரும் இடம்பெற்றிருந்தனர்.

இந்த புகைப்படம் வைரலான நிலையில் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அவரது இளைய மகன் பவன் புகைப்படத்தை பார்த்து தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் இளைய மகனின் புகைப்படத்தை வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.