ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அட்டகத்தி' தினேஷ் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த லப்பர் பந்து படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.
அத்துடன் 'அட்டகத்தி' தினேஷ் தற்போது 'கெத்து' தினேஷ் என அழைக்கப்படுகிறார். லப்பர் பந்து படத்தை தொடர்ந்து, முரளி கிருஷ் இயக்கத்தில் 'கருப்பு பல்சர்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இன்று உழவர் திருநாளை முன்னந்திட்டு, 'கருப்பு பல்சர்' படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.