Vijay Hazare Trophy தொடரில் 05வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்த கர்நாடகா அணி..!
Seithipunal Tamil January 16, 2025 10:48 AM

32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று நடைபெற்றன.

இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியும், அங்கித் குமார் தலைமையிலான அரியானா அணியும் மோதின. டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 09 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்தது.

அணியின் கேப்டன் அங்கித் குமார் 48 ரன்னும், ஹிமான்ஷு ரானா 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக கர்நாடகா அணி சார்பில் அபிலாஷ் ஷெட்டி 04 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா, ஷ்ரேயஸ் கோபால் தலா 02 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா அணி களமிறங்கியது. தேவ்தத் படிக்கல் 86 ரன்னும், ஸ்மரன் ரவிச்சந்திரன் 76 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், கர்நாடகா அணி 47.2 ஓவரில் 238 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுக்கொண்டது.

இதன்மூலம் 05 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகா அணி, 05வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்றைய போட்டியில், ஆட்ட நாயகன் விருது தேவ்தத் படிக்கல்லுக்கு வழங்கப்பட்டது. 

நாளை நடைபெறும் 02வது அரையிறுதியில் மகாராஷ்டிரா, விதர்பா அணிகள் மோதுகின்றமை குறிப்பிடதக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.