அதிகாரப்பூர்வ அறிவிப்பு... யுஜிசி நெட் தேர்வுகள் ஜனவரி 21, 27ம் தேதிகளில் நடைபெறும்!
Dinamaalai January 16, 2025 12:48 PM

பொங்கல் விடுமுறை தினங்களில் யுஜிசி நெட் தேர்வுகள் நடத்தப்பட இருந்த நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்புகளும், அதிருப்தியும் எழுந்தது. இதன் தொடர்ச்சியாக தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யுஜிசி நெட் தேர்வுகள் வரும் ஜனவரி 21ம் தேதி மற்றும் 27ம் தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இத்தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும்.

அந்த வகையில் இதற்கான தேர்வுகள் ஜனவரி 3ம் தேதி தொடங்கி ஜனவரி 16ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நாட்களில் உள்ள யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் பொங்கல் பண்டிகை நாட்களில் நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

அதனை தொடர்ந்து, ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகள் வரும் ஜனவரி 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.