இன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு... அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு.. பலத்த பாதுகாப்பு!!
Dinamaalai January 16, 2025 03:48 PM

இன்று காலை உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெற உள்ள நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிட்டுப் போட்டியைத் துவக்கி வைக்கிறார். இந்நிலையில் அலங்காநல்லூர் பகுதி முழுவதுமே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அலங்காநல்லூர் பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளையும், இரண்டு மனமகிழ் மன்றங்களையும் மூட மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு, அலங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லரை விற்பனை கடைகள் (FL-1) மற்றும் மனமகிழ் மன்றங்களை (FL-2) 16.01.2025 ஒரு நாள் மட்டும் மூடப்பட்டு இருக்கும். மேற்படி தினத்தில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.