'மாஸ்டர்' படத்திற்கு முதலில் மியூஸிக் டைரக்டர் யார் தெரியுமா? அனிருத் வந்ததன் பின்னணி
CineReporters Tamil January 16, 2025 03:48 PM

அனிருத் சாம்ராஜ்யம்: பெரிய பெரிய நடிகர்களின் படங்களை எடுத்துக் கொண்டால் அந்த படத்திற்கு பெரும்பாலும் இசை அமைப்பது அனிருதாகத்தான் இருப்பார். அந்த அளவுக்கு ஒவ்வொரு நடிகர்களின் ரசிகர்களின் பல்ஸை பிடித்து பார்த்து அதற்கு ஏற்ப இசையமைத்து அந்தப் படத்தை பெரும்பாலும் ஹிட்டாக்குவது அனிருத்தின் கையில் தான் இருக்கிறது. குறிப்பாக ரஜினியின் படங்களுக்கு அவர் தனியாக ஒரு மியூசிக் பெட்டியே வைத்திருப்பார் போல.

ரஜினிக்கு மட்டும் ஸ்பெஷல்: ரஜினி என்றால் பிஜிஎம்மில் இருந்து பின்னணி இசை வரை பாடல்கள் உட்பட எல்லாமே ஹிட் ஆகி விடுகின்றன. ஆனால் கமலுக்கு கடைசியாக இந்தியன் 2 திரைப்படத்தில் அவருடைய இசை எடுபடவில்லை. அதைப்போல விஜய் அஜித் ஆகியோரின் படங்களுக்கும் அனிருத்தின் இசை மிகப்பெரிய பக்கபலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திற்கு முதலில் அனிருத்துக்கு பதிலாக வேறொரு இசையமைப்பாளர் தான் இசையமைக்க வேண்டியது என பிரபல இசை அமைப்பாளர் சாம் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

பட்ஜெட்டுக்கு ஏற்ப மாறுகிறது: மேலும் அவர் கூறும் போது சில முக்கியமான தகவல்களையும் பகிர்ந்து இருந்தார். லோகேஷை தனக்கு பல வருடங்களாக தெரியும் என்றும் கைதி படத்தில் நான் இசை அமைத்திருந்தேன். அந்தப் படத்தின் கேரக்டர்களை பார்க்கும்பொழுது பத்து விதமான கேரக்டர்கள் இருக்கும். ஆனால் அதற்கு அடுத்தபடியாக ஒரு பெரிய ஹீரோ, அதாவது விஜய் போன்ற ஒரு பெரிய ஹீரோ. மிகப்பெரிய பட்ஜெட் எனும் போது அதற்கு ஏற்ப இசையமைப்பாளரும் பெரிய அளவில் இருக்க வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை நிலவியது .


முதலில் ஒரு பெரிய இசையமைப்பாளரை தான் அந்தப் படத்திற்கு ஒப்பந்தம் செய்ய இருந்தார்கள். அதன் பிறகு நான் தான் சொன்னேன் அனிருத் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என லோகேஷிடம் கூறினேன். அதன் பிறகு தான் அனிருத் அந்த படத்திற்கு இசையமைத்தார். ஆனால் லோகேஷின் படங்களை பொருத்தவரைக்கும் எல்லாமே எல் சி யு வில் வருவதால் அவரின் அனைத்து படங்களும் கிளைமாக்ஸில் கைதி படத்தின் அந்த பிஜிஎம்மில் தான் முற்றுப் பெறுகின்றன.

அதைக் கேட்டு ரசிகர்கள் எந்த அளவுக்கு உற்சாகமடைகின்றனர் என்பதை பார்க்கும் பொழுது எனக்கும் சந்தோஷமாக இருக்கிறது. கைது 2 படத்தில் நாம் இருவரும் சேர்ந்து பணியாற்றலாம் என லோகேஷ் சொல்லியிருக்கிறார். கூடிய சீக்கிரம் கைதி 2 படத்தில் பார்ப்போம் என ஷாம் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.