இதய நோய்களிலிருந்து இதயத்தை காப்பாற்றும் இந்த கருப்பு பழம்
Top Tamil News January 16, 2025 12:48 PM

பொதுவாக  சத்துள்ள உணவுகளில் முக்கியமானது கருப்பு திராட்சை .இந்த திராட்சையில் உள்ள ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த திராட்சையில் தினம் ஆறு எடுத்து தண்ணீரில் ஊறவையுங்கள் .பின்னர் மறுநாள் காலையில் அதை தண்ணீருடன் சாப்பிட்டால் ஏராளமான நன்மைகளை நம் உடல் பெறுகிறது .
2.அவற்றில் முக்கியமானது மல சிக்கலை தவிர்க்கலாம் .இது சிறந்த ஆக்சிஜனேற்றியாக செயல்படுகிறது.
3.பதப்படுத்தப்பட்ட உணவுகளையோ ,கார்போ ஹைட்ரேட் உணவுகளை சாப்பிடும்போது அடிக்கடி பசியுணர்வு தோன்றும் .ஆனால் இந்த திராட்சை உங்களின் பசியுணர்வை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது .


4.இதில் இரும்பு சத்து உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கிறது  
5.இரத்த அழுத்தம் குறிப்பிடத்தக்க சுகாதார சிக்கல்களை ஏற்படுத்தும். அதனைச் சரி செய்ய நீங்கள் தினமும் காலையில் கருப்பு திராட்சை சாப்பிடவேண்டும்.
6.நமது இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதில் சோடியம் முக்கியபங்காற்றுவதால் கடுமையான விளைவுகளைத் தவிர்ப்பதற்கு அதைக் கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம்.
7.எனவே இருதய நோய்களிலிருந்து விலகி இருக்க தினசரி பழங்களையும் கருப்பு திராட்சையும் உட்கொண்டு வந்தால் சோடியம் கட்டுக்குள் வைக்கப்பட்டு பல நோய்கள் வராமல் காக்கலாம்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.