பொதுவாக இயற்கை வழி மருத்துவர்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நிறைய கீரைகளையும் ,பழங்களையும் சாப்பிட சொல் கின்றனர் .நாம் இந்த பதிவில் புளிச்ச கீரையின் ஆரோக்கியம் குறித்து காணலாம்
1.இந்த புளிச்ச கீரை புற்று நோய் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது .
2.இந்த கீரையை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்று புண் நீங்குகிறது .
3.மேலும் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் ,மற்றும் ரத்த சோகை ,வயிறு பிரச்சினை மேலும் கொலஸ்ட்ரால் பிரச்சினை முதல் மலக்கட்டு பிரச்சினை வரை தீர்த்து வைக்கிறது இந்த கீரை
4.சில குழந்தைகள் உடலில் வலு இல்லாமல் இருப்பர் ,அந்த நோஞ்சானாக தெரியும் குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த கீரையைச் சிறிதளவெனும் சமைத்து சாப்பிடக் கொடுத்து வந்தால் உடம்பு தேறுவார்கள். 5.புளிச்ச கீரை இது பெயருக்கு ஏற்றார்போல புளிப்பு சுவையுள்ளது. இந்தக் கீரை, உடல் வலிமையை பெருக்குவதில் முதன்மை வகிக்கிறது.
6.இதன் மகத்துவம் தெரிந்துதான் ஆந்திர மக்கள் இந்தக் கீரையை “கோங்குரா சட்னியாக” செய்து தினமும் உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாய் இருக்கின்றனர்
7.சிலர் சொறி, சிரங்கு போன்ற சரும நோய் வந்து அல்லல் படுவர் ,அப்படி உள்ளவர்கள் இந்தக் கீரையை சட்டினி செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம் .