ஈரோட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் "ராகுல் டிக்கி", சினிமா வசனங்களுக்கு டப்பிங் செய்வது, நகைச்சுவையாக வீடியோ பதிவு செய்வது என்று புதிய வடிவில் பல வீடியோக்களை செய்து நகைச்சுவை பிரியர்களை ஈர்த்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வந்தார். இவருடைய முக பாவனை, உடல் பாவனை பார்த்துச் சிரிக்காத ஆளே கிடையாது.
இந்நிலையில் நேற்று இரவு 10:30 மணி அளவில் கோபி அருகே கவுந்தப்பாடியில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த செய்தி இவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் சிறு வயதில் சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசையுடன் விடியோக்களை பதிவு செய்து வந்தார். இவருடைய சேனலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ராகுல் இறந்த தகவலறிந்து இவர் குடும்பத்தார் , நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இவர் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பங்கை வார வாரம் ஏழை மற்றும் முதியோர்களுக்கு உணவு அளித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.