சமூக ஊடகங்களில் அவ்வபோது பல வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது. இதில் சில வீடியோக்கள் வைரலாகியும் உள்ளது. அந்த வகையில் சாலையில் ஒரு ஜோடி சண்டையிடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சாலையில் இந்த ஜோடி மாறி மாறி அடித்துக்கொண்ட பின்னர், இருவரும் ஒன்றாக செல்லும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவில் சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு ஜோடி பேசிக் கொண்டிருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தை, தகராறாக மாறியது.
இந்த தகராறு வெடித்த நிலையில், அந்த இளைஞன் பெண்ணை அடிக்க ஆரம்பித்தார். அவர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார். பின் அந்த பெண்ணும் இளைஞனரை அடிக்க தொடங்கினார். இருவரும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சாலையில் புரண்டனர். இதனை அங்கிருந்த மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து இருவரும் ஒரே பைக்கில் ஏறி அந்த இடத்தை இருந்து புறப்பட்டனர். இந்த சம்பவத்தை அங்கு இருந்தவர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகமாக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.